#BREAKING:: அதிமுகவில் இணைந்த சி.டி.ஆர் நிர்மல்குமார் மீது புகார்.. காரணம் இதுதான்..!!
Complaint against CTR NirmalKumar for insulting mentally challenged people
தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைகால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். பாஜகவில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தி இருந்தார்.
குறிப்பாக அந்த அறிக்கையில் "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பதானம் எதுவும் இல்லை.
தொண்டர்களை மதிக்காது தான்தோன்றித்தனமாக இவற்றுடன் "மனநலம் குன்றிய" மனிதரைப் போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பார்க்க முடிகிறது. 2019-ல் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும் கவலை இல்லாமல் மாய உலகத்தில் சுற்றிவரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது" என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை 420மலை எனவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சி.டி.ஆர் நிர்மல் குமார் வெளியீட்ட அறிக்கையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அண்ணாமலையுடன் ஒப்பிட்டு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியதாக மாற்று திறனாளிகள் அமைப்பு நடத்தி வரும் வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சி.டி ஆர் நிர்மல் குமாருக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
English Summary
Complaint against CTR NirmalKumar for insulting mentally challenged people