குழந்தைகளை முன்னாள் மனைவி என்னிடம் இருந்து பிரிக்கிறார்.. நீதிமன்றத்தில் இசைமைப்பாளர் புகார்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் மனைவி மீது இசையமைப்பாளர் டி இமான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழ் திரை உலகில் பிரபல இசை அமைப்பாளராக இருந்து வருபவர் டி இமான். இவர் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இவருக்கு திருமணமாகி மோனிகா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர் இதில் இதில் 2018 ஆம் ஆண்டு தனது மனைவி மோனிகா விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் அவர் முன்னாள் மனைவிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் அவர் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இரண்டு குழந்தைகளின் பாஸ்போர்ட்டும் என்னிடம் உள்ளது. ஆனால் ,மோனிகா அவற்றை தொலைந்து விட்டதாக கூறி புதிய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். இது சட்டவிரோதம் எனவே அந்த புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கம்பெனி கொடுத்தேன் ஆனால், உயர்நீதிமன்றம் உத்தரவு இல்லாமல் ரத்து செய்யமுடியாது என தெரிவித்துள்ளார்.

தனது குழந்தைகளை தான் பார்க்க கூடாது என்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனால், பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதனை விசாரித்த நீதிபதி தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, மோனிகா ஆகியொர் பதிலளிக்க வேண்டும் என கூறி ஜூன் 9ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Composer D. Imman complains in court about his Wife


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->