பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்! மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


பைக் ரேஸில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞருக்கு விபத்து பிரிவில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர் பைக் ரேஸில் ஈடுபட்டதாக கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தன்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் வார்டு பாய்களுக்கு உதவியாக ஒரு மாதம் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

ஒரு மாத காலம் காலை 8 மணி முதல் 12 மணி வரை பணியாற்ற வேண்டும் என்றும், தனது பணி அனுபவம் குறித்து நாள்தோறும் அறிக்கையாக தயார் செய்து மருத்துவமனை முதல்வருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.

மேலும் ஒரு மாத கால பணி முடிந்ததும், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய பிரவீன் மேற்கொண்ட பணி குறித்து ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Conditioned bail granted for Bike racer


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->