#Breaking || ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


கொரோனா விதிமீறல் தொடர்பாக இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களைத் தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2019 முதல் 2020 வரை கொரோனா விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் எனவும், இ-பாஸ் முறைகேடு, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட குற்றங்களைத் தவிர அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், வழக்குகளை திரும்ப பெற சென்னை தவிர அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona lockdown police cases are cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->