சிதம்பரம் அருகே சாகசத்தின் போது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி பலி.! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் அருகே சாகசத்தின் போது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவஜோதி நகரை சேர்ந்தவர் சமையல் தொழிலாளி புருஷோத்தமன். இவர் இருசக்கர வாகனத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி அருகே உள்ள விளையாட்டு மைதானம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது தனியார் பொறியியல் கல்லூரி மாணவரான தர்ஷன் மற்றும் அவரது நண்பர்களுடன் பைக்கில் சாகசம் செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக புருஷோத்தமன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் படுகாயமடைந்த புருஷோத்தமன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாமலைநகர் காவல்துறையினர்  15 மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Culinary worker died in chidambaram near


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->