வெளியானது குட் பேட் அக்லி படத்தின் டீசர்.!
good bad ugly movie teaser released
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதற்கிடையே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.
குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த டீசர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டீசர் காட்சிகள் அட்டகாசமாக அமைந்துள்ளது. அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
English Summary
good bad ugly movie teaser released