மாநில மொழிகளை அழிப்பதே பாஜகவின் மறைமுக கொள்கை - முதல்வர் மு.க ஸ்டாலின்.!
chief minister mk stalin speech about bjp
தமிழகத்தின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆதிக்க மொழித் திணிப்பை தடுத்து அன்னைத் தமிழை காப்பேன் என்றுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது:-
"இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம் என்று அன்னைத் தமிழே சூளுரைக்கிறேன். தமிழ்நாடு காட்டுகின்ற பாதையே ஒவ்வொரு மாநிலமும் தன் தாய்மொழியை காப்பதற்கான பாதை.இந்திய மொழிகளை ஒவ்வொரு முறையும் காத்து நிற்பது தமிழ்நாடும் தமிழர்களின் மொழியுணர்வும் தான்.
மாநில மொழிகளை வளர்க்கவும் பரவச் செய்யவும் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்துவதாக பா.ஜ.க. சொல்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு சொல்வது பச்சைப்பொய் என்பதை பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன.
இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்போம், மாநில மொழிகள் அனைத்தையும் வெறுப்போம் என்பதே பா.ஜ.க.வின் மொழிக்கொள்கை. பஞ்சாப், தெலுங்கானா மாநிலங்கள் தற்போது தாய்மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று உணர்ந்து உத்தரவிட்டுள்ளது. மாநில மொழிகளை அழிக்கும் பா.ஜ.க.வின் மறைமுக கொள்கையை நேரடியாக தோலுரித்துக்காட்டியது தமிழ்நாடு" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
chief minister mk stalin speech about bjp