பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தந்தை, மகளின் உடல்கள்..ஆவடி அருகே பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தந்தை, மகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 70 வயதான  சாமுவேல் சங்கர் என்பவர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் வீடு எடுத்து அவர், தனது மகளுடன் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது வீடு பூட்டி இருந்துள்ளது, 

இந்தநிலையில் அவரது பூட்டிய வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது சாமுவேல் மற்றும் அவரது மகள் இருவரும் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதனை தொடர்ந்து அழுகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சாமுவேல் சங்கருக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்துவந்த மருத்துவர் சாமுவேல் எபனேசர் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சையின்போது சாமுவேல் சங்கர் இறந்துள்ளார் என்றும்  இது தொடர்பாக அவரது மகள், மருத்துவர் எபனேசருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது . அப்போது அவரை எபனேசர் தள்ளிவிட்டதில் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் இதனால் அச்சமடைந்த மருத்துவர் எபனேசர் வீட்டை பூட்டிவிட்டு சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Decomposed bodies of father and daughter found in locked house Panic near Avadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->