கூடுதல் மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார் - துணை முதல்வர் உதயநிதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் மழை பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்த உயர்நிலை ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம்  கேட்டறிந்தார். இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், முதலமைச்சரின் உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவமழைத் தொடர்பாக சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்த உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்தினோம். வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையில் மழை பெய்யக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தோம்.

அதிலும் குறிப்பாக கடந்த அக்டோபர் 14,15,16-ஆம் தேதிகளில் பெய்த மழையின் போது, மண்டல அளவில் நியமிக்கப்பட்டு பணியாற்றிய கண்காணிப்பு அலுவலர்கள், களத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deputy chief minister uthayanithi stalin speech about rain


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->