சீர்காழி! டேங்கர் லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து.! - Seithipunal
Seithipunal


சீர்காழி அருகே டேங்கர் லாரி மின்கம்பத்தில் மோதிய விபத்தில் ஓட்டுநர் காயமடைந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூங்குடி கிராம பகுதியில் 6,000 லிட்டர் டீசலுடன் வந்த டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி, பக்கத்தில் இருந்த வயலில் தலைகீழாக கவிழ்ந்து உள்ளது. இந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிகிச்சைக்காக ஓட்டுனரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் டேங்கர் லாரியை மீட்கும் போது டேங்கரில் இருந்து வெளியேறிய டீசலை அப்பகுதியை சேர்ந்த மக்கள் டீசலின் ஆபத்தை உணராமல் பாட்டில்கள், கேன்கள், பக்கெட் போன்ற பொருட்களில் பிடித்து சென்றுள்ளனர். அவர்களை காவல்துறையினர் எச்சரித்த போதும் அதனை பொருட்படுத்தாமல் டீசலை பிடித்து சென்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diesel tanker lorry accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->