பாலிடெக்னிக் மாணவர்கள் கவனத்திற்கு.. இன்று முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


பாலிடெக்னிக் முடித்தவ மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல்கல்லுரிகளில் நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:"தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பிஎஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான நெறிமுறைகள்:

விண்ணப்பிக்கும் முறை :

www.accet.co.in / www.accetedu.in / www.tnlea.com என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய முடிவடையும் நாள்  23.07.2022 .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diploma students apply engineering on online from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->