தீபாவளி பண்டிகை... தமிழக அரசு தரப்பில் வெளியான அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று, தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

வரும் நவம்பர் 9, 10, 11ஆம் தேதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10,975 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

கல்வி, வேலை, வாழ்வாதாரத்திற்காக தங்களது சொந்த ஊர்களை விட்டு சென்னை, கோவை என பல பகுதிகளில் இருக்கும் மக்கள், பொங்கல், தீபாவளி பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லவது வழக்கம்,

இந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், மக்களின் வசதிக்காக, சிறப்புப் பேருந்துகளை இயக்குவது என்பது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்குப் பின், தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு 10,975 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பேருந்துகளுடன், கூடுதலாக 4,675 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali 2023 Special bus announce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->