தீபாவளி மது விற்பனை - டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு - தமிழக அமைச்சரின் பேட்டி! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், "டாஸ்மாக் மது விற்பனையை அதிகப்படுத்துவதற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தமிழக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவிக்கையில்,

"டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை அதிகப்படுத்துவதற்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீபாவளி நேரத்தில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மது குடிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையிலோ, விற்பனையை அதிகரிக்கும் வகையிலோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

மது விற்பனையை குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali 2023 TASMAC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->