வெள்ள பாதிப்பு - மக்களுக்கு ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்.!
dmdk public secretary premalatha vijayakant says releif fund 10000
தமிழகத்தில் பெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அத்தியாவசிய தேவைகளை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூபாய் 2000 அறிவித்துள்ளது. ஆனால், இது போதுமானதாக இல்லை என்று அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும். வெள்ளத்தால் பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை தமிழக அரசு வழங்க வேண்டும்.
விளைநிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேறும் சகதியுமாக உள்ள நிலையில் தமிழக அரசு வீண் விளம்பரம் தேடி கொள்கிறது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
dmdk public secretary premalatha vijayakant says releif fund 10000