திமுக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு..5 முக்கிய திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து 5 முக்கிய திட்டங்களை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்திய பின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் தமிழக சட்டப் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல் போன்ற சாதனைகளை செய்துள்ளோம் என்ற பெருமிதத்துடன் தான் இந்த மாமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 5 முக்கியத் திட்டங்களை அறிவித்தார். அதன்படி,

அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு  மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.

ஊட்டச்சத்து குறைபாட்டை களைய ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து தகைசால் பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் உருவாக்கப்படும். 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

ரூ.150 கோடியில் அரசு மற்றும் மாநகராட்சி சேர்ந்த 25 பள்ளிகள் மேம்படுத்தப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களை போன்று நகர்ப்புறங்களிலும் மருத்துவ நிலையங்களை அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டமானது தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்படும்

மேலும் நிறைவேற்றப்படாத அடிப்படைத் தேவைகள் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனைக்கு ஏற்கப்படும் என 5 முக்கிய திட்டங்களை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK charge in one year completed 5 schemes announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->