திருவெண்ணெய்நல்லூர் : கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து 3 பேர் உயிரிழப்பு ..!!
During Well Cutting Work 3 People Died in Thiruvennainallur
திருவெண்ணெய்நல்லூரில் கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 100 அடி ஆழமுள்ள கிணற்றை மேலும் ஆழப்படுத்தும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அருங்குறிக்கை என்ற கிராமத்தில் கோவிந்தன் என்பவருடைய மகன் கண்ணன் வசித்து வருகிறார். இங்கு கண்ணனுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
இந்த விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை கடந்த 10 நாட்களாக ஆழப்படுத்தும் பணியை திருக்கோவிலூர் அருகே உள்ள பெருங்குறிக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் (48), ஹரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (40), நெய்வேனை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) ஆகியோர் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றும் இந்த கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் ராட்சத பொக்லைன் இயந்திரத்தில் கயிறு கட்டி கிணற்றில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பொக்லைன் இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த இரும்பு ரோப் அறுந்து , 3 பேரும் 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தனர்.
இந்த சம்பவத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே கை மற்றும் கால்கள் முறிந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
During Well Cutting Work 3 People Died in Thiruvennainallur