அண்ணிக்கு பாலியல் தொல்லை... தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்... செஞ்சி அருகே பயங்கரம்..! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பியை அண்ணன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன்கள் மாரிமுத்து (35), வீரமுத்து (32). இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த வீரமுத்துவை வழிமறித்த மர்ம நபர்கள் திடீரென சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர். இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வீரமுத்துவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, வீரமுத்து சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வீரமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், வீரமுத்து, அண்ணன் மாரிமுத்து மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து, வீரமுத்துவை வழிமறித்து சரமாரியாக தாக்கியது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாரிமுத்துவை கைது செய்த போலீசார், மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elder Brother arrested for stabbing younger brother to murder in near gingee Villupuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->