வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியுமா? முடியும் எப்படி?!
ELECTION VOTE DOCMENTS
வரும் மக்களவை தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிப்பதற்காக 12 ஆவணங்களை அறிவித்துள்ளது. அதன்படி,
1. ஆதார் அட்டை
2. பான் கார்டு
3. ரேஷன் அட்டை
4. வங்கி அல்லது அஞ்சல் பாஸ்புக்
5. ஓட்டுநர் உரிமம்
6. பாஸ்போர்ட்
7. புகைப்படத்துடன் கூடிய பென்ஷன் ஆவணம்
8. புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை
9. எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி. அதிகாரப் பூர்வ அடையாள அட்டை
10. சமூக நீதித்துறையின் அங்கீகாரம் பெற்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ்
11. மத்திய அரசின் வேலை வாய்ப்பு அடையாள அட்டை
12. தொழிலாளர் அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு ஆகிவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி நீங்கள் வாக்களிக்க முடியும்.
மேலும், உங்களின் வாக்காளர் அட்டையில் பெயரில் சிறு எழுத்துப்பிழைகள் இருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள். இந்திய ஜனநாயக நாட்டில் வாக்காளர் எவரொருவரின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் கூடுதல் முன்னேற்பாடுகளாக இதனை செய்துள்ளது. தவறாமல் உங்கள் ஜனநாயக கடமை, உரிமையை ஆற்ற வாக்களியுங்கள்!