பத்திரிக்கையாளர்கள் மீது "மிகப்பெரிய போர்".. நீதிமன்ற வளாகத்தில் முழங்கிய ஃபெலிக்ஸ்.!! - Seithipunal
Seithipunal


பெண் காவலர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே அவரைப் பேட்டி எடுத்த ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் தலைமையாசிரியர் ஃபெலிப்ஸ் ஜெரால்ட் திருச்சி மாவட்ட காவல்துறையினரால் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவர் நேற்று காலை ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 

பின்னர் அவர் போலீஸ் வாகனம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று இரவு திருச்சி மத்திய குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். 

அவரை விசாரித்த நீதிபதி வரும் மே 27 ஆம் தேதி வரை ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றத்தில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை அழைத்து வந்த போது செய்தியாளர்கள் நோக்கி பேசிய அவர் "விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன். எல்லா பத்திரிகையாளர்களுக்கும் இதே நிலை திரும்பும். அதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 

இது பத்திரிக்கையாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய போர்" என முழங்கியவாறு ஏறிய ஃபெலிக்ஸ் ஜெரால்டை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். முன்னதாக தனது கையை உடைத்தது கோவை மத்திய சிறையில் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FelixGerald alleged Greatest War on Journalists


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->