முன்னாள் திமுக எம்பி கொலை வழக்கு.. ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி..!!
Former DMK MP murder case bail plea dismissed again
முன்னாள் திமுக எம்பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!
திமுக திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்தான் கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில் மஸ்தான் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மகன் அளித்த புகாரின் அடிப்படையில் அவருடைய மஸ்தானின் கார் டிரைவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் டாக்டர் மஸ்தான் கொலையில் அவரது தம்பி கவுஸ் அஷாம் பாஷாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்திருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக கவுல் அசாம் பாஷா ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணை முடிந்த நிலையில் தமக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத் சொத்துக்காக திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை எனவும் விசாரணை முடிந்த நிலையிலும் இருவரும் ஜாமின் வழங்கக் கூடாது எனவும் நீதிமன்றத்தில் வாதித்தார். அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் செய்த கவுஸ் அஷாம் பாஷா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
English Summary
Former DMK MP murder case bail plea dismissed again