சாப்பிட்ட பானிபூரிக்கு காசு கேட்டதால் உரிமையாளரை வெளுத்து வாங்கிய கும்பல் - 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சாப்பிட்ட பானிபூரிக்கு காசு கேட்டதால் உரிமையாளரை வெளுத்து வாங்கிய கும்பல் - 4 பேர் கைது.!

சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியில் தேவி என்ற பெண் பானிபூரி கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்த கடைக்கு நான்கு பேர் கொண்ட கும்பல்  பானி பூரி சாப்பிடுவதற்காக வந்துள்ளனர். அதன் படி அவர்கள் பானிபூரி சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்துள்ளனர். 

இதனால் தேவிக்கும் அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் அதிகரித்ததால், ஆத்திரத்தில் அந்த வாலிபர்கள் கடையில் இருந்த அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், அவர்கள் தேவியை ஆபசமாக பேசி அவரைத் தாக்கியதோடு, கடையிலிருந்த பணத்தையும் பறித்து விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், தகராறில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்தது விசாரணை நடத்தியதில் அவர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. பானிபூரி சாப்பிட்டு விட்டு பணம் தராமல் உரிமையாளரைத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for attack panipoori shop owner in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->