சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு...விண்ணப்பிக்க இந்த மாதம் 14  ம் தேதி கடைசி நாள்..! - Seithipunal
Seithipunal


தலைமைச் செயலரும், தமிழக அரசின் குடிமைப்பணிகள் பயிற்சி மையத் தலைவருமான வெ.இறையன்பு நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு தமிழக அரசின்சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயர் கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிஆகிய மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வில் இப்பயிற்சி மையத்தின் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர்.

தற்போது, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலைசிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்பப் படிவம் ஆகியவை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.14-ம் தேதி வரை பயிற்சி மையங்களில் நேரடியாக அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24621475 மற்றும் 24621909 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சியால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றிபெற்று, தற்போது பணியிலிருக்கும் அரசு அலுவலர்கள், அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்படும். வாரந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். காத்திருப்பு தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான நாட்கள் காலியிடங்களுக்கு ஏற்ப www.civilservicecoaching.com இணையவழியாக தெரிவிக்கப்படும். பயிற்சி வகுப்புகள் செப்.21 முதல் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free Training Course Uniformed Staff Exams Last date apply 14th this month


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->