அதிமுக கூட்டணிக்கு இது தற்காலிக தோல்வி என ஜி.கே.வாசன் கருத்து.!
GK Vasan Statement on Election Results
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியின் தோல்வி தற்காலிகமானது என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கயில்,
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வின் வெற்றிக்கு சரியான காரணங்களும் உண்டு, தவறான காரணங்களும் உண்டு என தெரிவித்துள்ளார்.
அதாவது கூட்டணி கட்சிகளுக்குள் ஒதுக்கிய இடங்களின் பங்கீடு மற்றும் ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றால் பெற்ற பெருவாரியான வெற்றி திமுக பெற்ற வெற்றி என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு குறைவான எண்ணிக்கையில் கூட்டணியில் வாய்ப்பு கிடைத்தாலும், கணிசமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது என்றும், கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்த கட்சியாக த.மா.கா விளங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க, த.மா.கா கூட்டணியின் தோல்வி தற்காலிகமானது தான் என்றும்,த.மா.கா. மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக மற்றும் த.மா.கா. கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும்,
த.மா.கா தொடர்ந்து மக்கள் பணியையும், இயக்கப்பணியையும் வலுப்படுத்தி, வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் ஏற்படுத்த பாடுபடும் என்றும் அவர் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
GK Vasan Statement on Election Results