மேகதாதுவில் புதிய அணைக்கு நிதி ஒதுக்கீடு, ஜி.கே.வாசன் கண்டனம்.!
GKVasan statement on Mekedatu dam
மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக மாநில சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பது தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் பாலைவனமாகிவிடும். இத்திட்டம் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டமாகும். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு காவிரி பிரச்சனை பயிர் பிரச்சனை மட்டுமல்ல அவர்களின் உயிர் பிரச்சனை.
கர்நாடக பிஜேபி அரசுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் பல்வேறு பிரச்சினைகள் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து இருக்கும் போதிலும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்ற கருத்தில் மட்டும் ஒத்த கருத்தோடு செயல்படுகிறார்கள். தமிழக அரசு இவர்கள் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து அவற்றை முறியடிக்க வேண்டும்.
தமிழக மக்களின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, மத்திய அரசு காவிரி மேகதாது பிரச்சனையில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று வ்லியுறுத்தி உள்ளார்.
English Summary
GKVasan statement on Mekedatu dam