குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடல் - தமிழக அரசு தகவல்..! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை துப்பாக்கி சூடும் பயிற்சி மையம் மூட்டப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், துப்பாக்கிச்சுடு தளத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார்.  இதனை அடுத்து, புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்த  சுரேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். 

அந்த மனுவில், சிறுவன் இறந்ததை சூட்டி காட்டியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே போல ஒரு சம்பவம் நடைபெற்றது எனவே, துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூட உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் அரசு தரப்பில் , கடந்த டிசம்பர் 30ம் தேதியே நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிமேல் சாதாரண பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government announces closure of sniper training site


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->