சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து சீர்காழிக்கு சிதம்பரம் வழியாக அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்தப் பேருந்து நேற்று நள்ளிரவு சிதம்பரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பயணிகளை கீழே இறக்கிய பிறகு 5 பயணிகள் மட்டுமே பேருந்தில் இருந்துள்ளனர். பிறகு சீர்காழி நோக்கி புறப்பட தயாரான போது பேருந்தின் பின்புறம் உள்ள டீசல் டேங்க் அருகே வெடி சத்தம் கேட்டுள்ளது. 

அரசு பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் வெடி செத்ததால் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பேரில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். சிறிது நேரத்தில் அரசு பேருந்து முழுவதும் மளமளவென தீப்பறவியது. இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு பேருந்தில் ஏற்பட்ட இந்த தீவை விபத்து சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government bus caught fire at Chidambaram bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->