இளைஞர்களின் எதிர்காலம் இதுதான் - ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு.!
Governor RN Ravi speech
நீலகிரி, ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இரண்டாம் நாள் மாநாடு இன்று தொடங்கியது.
இந்த மாநாட்டிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, கடந்த 2021 ஆம் ஆண்டு நான் ஆளுநராக பொறுப்பேற்ற போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
சில பிரச்சனைகளும் இருந்தது. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் மற்ற பழக்க பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி செயல்பட்டு வந்தது. அவர்களின் தரமும் குறைந்து காணப்படுது.
இதனை சரி செய்து ஒன்றிணைக்கவே இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. புதிய தேசிய கல்வி கொள்கை தான் எதிர்காலம். நம் நாடு தற்போது பெரிய மாற்றத்திற்காக தயாராகியுள்ளது.
உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின்தங்கி இருக்கிறோம். தவறான கல்விக் கொள்கையால் படித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வி இளைஞர்களை திறமை மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உடையவர்களாகவும் உருவாக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும்.
சுதந்திரத்திற்கு முன்பு உலகின் பெரும் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்த நாடாக இருந்தோம். இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கை. புதிய தேசிய கல்வி கொள்கைதான் இளைஞர்களின் எதிர்காலமாக உள்ளது.
பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கைதான் புதிய இந்தியாவை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.