இன்றிலிருந்து குரூப் 5 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு பணியாளர் தேர்வாணையம்..!
Group 5 exam notification
குரூப் 5 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் மூலம் நிரப்பும். அந்த வகையில் தலைமை செயலகத்தில் காலியாக உள்ள பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 இடங்களை நிரப்ப குரூப் 5 தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி, இன்று முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், செப்டம்பர் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Group 5 exam notification