பணமோசடி வழக்கில் ஹரி நாடாரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
Hari Nadar case 2023 Chennai
100 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக தொழிலதிபர் ஒருவரிடம் 1.25 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய கோரிக்கை வைத்த நிலையில், நீதிமன்றம் ஒரு நாள் மட்டுமே காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் இஸ்மாயில் என்பவர் பழம், காய்கறி ஏற்றுமதி-இறக்குமதி தொழில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொழில் நஷ்டத்தை சரி செய்ய, ஹரி நாடாரிடம் 100 கோடி ரூபாய் கடன் ஏற்பாடு செய்து தரும்படி இஸ்லாமில் கேட்டுள்ளார்.
![](https://img.seithipunal.com/media/Hari nd.png)
இந்த கடனுக்கு ப்ராசசிங் ஃபிஸ் என்ற அடிப்படையில் 1.25 கோடி ரூபாய் பெற்றுக் கொண்ட ஹரி நாடார், கடன் வாங்கித் தராமல் மோசடி செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து ஹரிநாடர் மீது மோசடி புகார் அளித்தார் தொழில் அதிபர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பெங்களூர் சிறையில் இருந்த ஹரி நாடாரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக ஹரி நாடாரை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுமதி கேட்ட நிலையில், ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Hari Nadar case 2023 Chennai