கோவை : நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்.! - Seithipunal
Seithipunal


நீதிமன்ற வளாகத்தில் கணவர் மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் கவிதா என்ற பெண்மீது அவரது கணவரே ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நபர் ஆசிட் வீசும் போது வழக்கறிஞர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது வழக்கறிஞர் மீதும் ஆசிட் பட்டதில் அவரும் காயமடைந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த வழக்கறிஞர்கள் ஆசிட் வீசிய நபரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய நபரிடம் தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband acid attack on wife in covai court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->