மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கோவிலஞ்செரி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருக்கு தேன்மொழி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2009ஆம் ஆண்டு தேன்மொழி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தேன்மொழியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சுப்ரமணியன் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தனக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் இதனால் தனக்கும் தனது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும் கூறியுள்ளார். சம்பவத்தன்று, தேன்மொழியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் அதனால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றார்.

அதை நான் தடுக்காமல் இருந்ததாகவும் இதனால் அதற்கு கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வாக்குமூலத்தை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband arrested for inciting wife to commit suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->