மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்.. விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


மனைவி சந்தேகப்பட்டு கொலை செய்த  கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், விநாயகபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார். இவருக்கு திருமணமாகி சசிகலா என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த 13-ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரை அடக்கம் செய்ய முயற்சித்துள்ளனர். இது சசிகலாவின் உறவினர்களுக்கு தெரியவரவே அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் சசிகலாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரின் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்ப்து அவர் சசிகலாவை கொலை செய்ததை ஒப்புகொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், சசிகலாவை வேலைக்கு செல்ல ஒரு பயிற்சி மையத்திற்கு அனுப்பியதாகவும் அதிலிருந்து அவர் அதிக நேரம் செல்போனில் பேசி வந்ததாகவும் அதனை கண்டித்தும் கேட்டகவில்லை என தெரிவித்தார்.

சம்பவதன்று, இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும் ஆத்திரத்தில் அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து, அவர் குடும்பத்தினரிடம் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து, அவர் மீது வழக்குபதிவு காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband Kill His Wife Near Selam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->