"கொதிக்கும் எண்ணையை" மனைவி முகத்தில் ஊற்றிய கணவர்... கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!
Husband pours boiling oil on his wifes face in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கணவர் கொதிக்கும் எண்ணெயை மனைவி முகத்தில் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் திருவனப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் டிரைவராக வேலை பார்ப்பதால் 15 நாட்கள் அல்லது மாதத்திற்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவரது மனைவி காவிரி (29). இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விஜய்க்கு, மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின்ன் முகத்தின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த காவிரி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Husband pours boiling oil on his wifes face in kirishnagiri