வடகிழக்கு பருவமழை தொடங்கியது - இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விளக்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை சற்று முன்பு தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வழக்கமாக அக்டோபர் மாதம் 20ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும், ஆனால் இந்த வருடம் 5 நாட்கள் முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.

பொதுவாக ஏழு நாட்கள் வரை முன்பும், பின்பும் வடக்கு கிழக்கு பருவமழை தொடங்குவது இயல்பு தான் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று (14-10-2024) காலை தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (15-10-2024) காலை 0530 மணி அளவில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, இன்று 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. 

இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMD North East monsoon Start in india


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->