மக்களே ஜாக்கிரதை! பருவமழை தொடங்கியாச்சு! மழைக்கால நோய்களை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
People beware Monsoon has started What should be done to prevent monsoon diseases
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்கால நோய் தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், மழைக்காலத்தில் பரவும் நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மழைக்காலத்தில் பரவக்கூடிய முக்கிய நோய்களில் புளூ காய்ச்சல், டெங்கு, மலேரியா, டைபாய்டு மற்றும் எலி காய்ச்சல் அடங்கும். இந்நோய்கள் வெகுவாக பரவக்கூடியது என்பதால், மக்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மழைக்கால நோய்களிலிருந்து தற்காத்து கொள்வதற்காக, மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். முதலில், வீட்டின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்குவதை தவிர்த்து, கொசுக்கள் உருவாகாமல் கவனிக்க வேண்டும். மேலும், தடுப்பூசிகளை அவசியமாக போடுவது, சுத்தமான உணவு மற்றும் நீரை உபயோகிப்பது போன்றவை மிகவும் முக்கியம். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியவுடன் கை, கால்களை சோப்பால் நன்றாக கழுவ வேண்டும். அதுமட்டுமல்லாமல், தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ள இடங்களில் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும்.
இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் மக்கள் மழைக்கால நோய் தொற்றுகளிலிருந்து தங்களை பாதுகாக்க முடியும்.
English Summary
People beware Monsoon has started What should be done to prevent monsoon diseases