செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பும் நிலையில் உள்ளது.

இதனிடையே, செம்பரம்பாக்கம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 250 கன அடியிலிருந்து 500 கண்ணாடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரியின் நீர் வரத்து வினாடிக்கு 775 கனஅடியாக உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

increase in water level to chambambakkam lake


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->