டாஸ்மாக் நிறுவனம் ரூ.7,986.32 கோடி வரி பாக்கி... வருமானவரித்துறை நோட்டீஸ்க்கு தடை..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் 2021-2022-ம் நிதி ஆண்டில் ரூ. 7,986.32 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்த வேண்டும் என டாஸ்மார்க் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 

இந்த நோட்டீசை எதிர்த்து டாஸ்மார்க் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 2016-2017 நிதியாண்டில் மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இரு நீதிபதிகள் அமர்வு முன்பு நிலுவையில் உள்ளதால் இந்த உத்தரவையும் எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் டாஸ்மாக் நிறுவனம் அணுக வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இதனை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் அடங்கிய இருநபர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்பொழுது வருமானவரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2016-2017 ஆம் ஆண்டில் டாஸ்மாக் நிறுவனம் தமிழக அரசுக்கு மதிப்பு கூட்டு வழியாக 14,000 கோடி ரூபாய் செலுத்தியது வரிக்கு உட்பட்டது எனவும், மாநில அரசு நிறுவனங்கள் சட்டப்படி வருமான வரி செலுத்த வேண்டும் எனவும் வாதிட்டார்.

இதற்கு டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதிப்பு கூட்டப்பட்ட வரிக்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்க்கு இரண்டு வார காலம் இடைக்கால தடை விதித்தனர். மேலும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது வருமானவரித்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Interim stay on notice issued by Income Tax Dept to Tasmac


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->