தமிழகத்தில் துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட கடல் பசு - எச்சரிக்கையை மீறி தொட்டதால் வந்த வினை..! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் பசுவை வெட்டி விற்பனைசெய்த மீனவரை கடலோர காவல்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மந்திரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் அடைக்கலம் (25).

இவர்சேதுபாவாசத்திரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இவரது வலையில் அவுரியா எனப்படும் அபூர்வவகை கடல் வாழ் உயிரினமான கடல்பசு சிக்கியது.

கடல்பசுவலையில் சிக்கினால் அதை மீனவர்கள் உயிருடன் கடலுக்குள் விட்டு விடுவது வழக்கம். பாக் ஜலசந்தி, மன்னார்வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை உயிரினமான கடல்பசுவை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.

கடல்பசுவை கரைக்கு கொண்டு வந்த மீனவர் அடைக்கலம், அதை வெட்டி துண்டுகளாக்கி விற்பனை செய்வதாக கடலோர காவல்துறை ஆய்வாளர் சுபாவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, மீனவர் அடைக் கலத்தை பிடித்து, பட்டுக்கோட்டை வனத்துறையினரிடம் கடலோரக் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

மேலும் கடல்பசு இறைச்சியை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற அதே பகுதியை சேர்ந்த நீலகண்டன் மகன் கணேசனை தேடி வருகின்றனர்.

மீனவர் அடைக் கலத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadal pasu found near bay of bengal sea


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->