பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மற்றம்.! - Seithipunal
Seithipunal


பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை அளித்த காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மற்றம்.!

சென்னையில் உள்ள தாம்பரம் மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இருந்து 8 பெண் போலீசார் பணி மாறுதல் பெற்று துரைபாக்கம் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், கண்ணகி நகர் பெண் போலீசார் ஒருவர் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் கடிதம் ஒன்று அளித்துள்ளார். அந்தக் கடிதத்தில்  கண்ணகி நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் முத்து சாமி தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், பெண் போலீசாரின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் படங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி தொடர்ந்து சித்தரவதை செய்வதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.

மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தங்களை பழிவாங்கும் நோக்கில் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தி அதன் பின்னரும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையடுத்து காவல் ஆணையர் அமலராஜ் இந்த புகாரை விசாரணை செய்யும் படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி உயர் அதிகாரிகள் புகார் குறித்து விசாரணை செய்து அதற்கான அறிக்கையை காவல் ஆணையர் அமல் ராஜிடம் சமர்ப்பித்தனர்.

அதன் படி காவல் ஆய்வாளர் முத்து சாமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதே சமயம் கண்ணகி நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எட்டு பெண் போலீசாரும் விடுவிக்கப்பட்டு வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kannagi nagar inspector muthusami change waiting list for sexuall harassment issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->