கொடைக்கானல் அருவிகளால் குதூகலமான சுற்றுலா பயணிகள்! - Seithipunal
Seithipunal


மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் கொடைக்கானலில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதால் அங்குள்ள நீர்நிலைகளில் வேகமாக நீர் நிரம்பி வருகின்றன. 

அதுமட்டுமல்லாமல் கொடைக்கானலில் உள்ள அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி, வடக்கானல் அருவி, புலவிச்சாறு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. கொடைக்கானலில் தொடர் மழையால் குளிர்ச்சி தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் படகு சவாரி, சைக்கிள், குதிரை சவாரி மற்றும் மேல் மலைமுகடுகளில் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்களை பார்த்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்து வருகின்றனர். இதனால் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodaikanal gushing water waterfalls tourists excited


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->