கொடைக்கானலில் மலர் கண்காட்சி எப்போது.? தேதி அறிவிப்பு.!
Kodaikkaanal flowers exhibition starts from May 26
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக சென்று சுற்றி பார்த்து வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே போன்ற கோடை விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் தற்போது கொடைக்கானலில் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதனைக் கண்டு மகிழ்வதற்காக தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் கொடைக்கானலில் விரைவில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனையடுத்து கொடைக்கானலில் புகழ்பெற்ற பிரையண்ட் பூங்காவில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே மலர் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது மலர் செடிகளில் வகவகையான லட்சக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த நிலையில் கொடைக்கானலில் வரும் மே 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Kodaikkaanal flowers exhibition starts from May 26