#வீடியோ: லீவ் போடுறியா.? இளம்பெண்ணை இரும்பு ராடால் தாக்கும் மேனேஜர்.! கோவையில் பகீர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று இருக்கிறது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மில்லில் பணிபுரியும் 22 வயது இளம்பெண் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். 

அந்த பெண் வேலைக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே இளம்பெண்ணை அவர் தங்கியிருந்த ஹாஸ்டல் பகுதிக்கே வந்து மேலாளர் முத்தையா இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்குகிறார். மேலும், ஹாஸ்டல் வார்டன் லதாவும் அந்தப் பெண்ணை கொடூரமாக தாக்குகிறார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து லதா மற்றும் முத்தையா இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேனேஜர் மற்றும் ஹாஸ்டல் வார்டன் இருவரும் கம்பியால் கொடூரமாக தாக்கும் பொழுது அந்த பெண் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு வீடியோ வெளியாகியது. ஆனால் இப்படி வெளிவராமல் நிறையக் கொடுமைகள் திருப்பூர் மற்றும் கோவை பகுதியில் நடைபெற்று வருகின்றது என்பது வேதனைக்குரியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai spinning mill Voilence against women


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->