கிருஷ்ணகிரி 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தேசிய மகளிர் ஆணையம்! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததுள்ளது. 

கிருஷ்ணகிரி, தனியார் பள்ளியின் என்சிசி முகாமிற்கு சென்ற 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர், பள்ளி தாளாளர், பயிற்சியாளர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

என்சிசி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான முக்கிய குற்றவாளி சிவராமனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, காவல்துறை விசாரணையில் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், பள்ளியில் நடந்தது போலியான என்.சி.சி கேம்ப் என தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது.

மேலும், இந்த வழக்கு குறித்து 3 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை  தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள், வேறு மாவட்டங்களில் இது போன்று போலியாக என்.சி.சி முகாம்களை நடத்தி இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கல்வித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும் , மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும். அனுமதியின்றி முகாம் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnagiri school child abuse case NCW


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->