17 வயது சிறுவன் கொலை.. அதிர்ச்சியில் கிராம மக்கள்.. போலிசிடம் பரபரப்பு கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலேபள்ளி என்ற கிராமத்தில் குப்புசாமி என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற 17 வயது மகன் இருக்கின்றார். இவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே பாதியில் படிப்பை விட்டு விட்டு கூலி வேலை செய்து வரும் நிலையில், இந்த ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. 

நேற்று இரவு திருவிழாவில் கலந்து கொண்ட முருகேசன் இரும்பு கம்பி மற்றும் கற்களால் தாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கோவிலுக்கு அருகில் கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முருகேசன் உடலை கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சந்தேகத்தின் பேரில் பிரபு என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அந்தக் கிராமத்தில் ஒரு வீடு தீப்பிடித்து எரிந்ததில் முருகேசனின் தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை கொடுத்த சில நாட்களில் அவர் காணாமல் போன நிலையில், தற்போது வரை கிடைக்கவில்லை.

ஆறு மாதங்களுக்கு முன்பு பிரபுவின் தந்தை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து இருக்கிறார். அதிலும் சந்தேகம் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். முருகேசன் மீது பிரபுவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தக் கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினரை கிராமத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என போலீசாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Krishnakiri 17 years Boy Murder Case Issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->