கந்த சஷ்டி விழா - வைர வேலுடன் பக்தர்களுக்கு கட்சி தந்த ஜெயந்திநாதர்..!
kanda sasti festival 4th day function
முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இருந்து கோவிலில் திரளான பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்து வருகின்றனர்.
4-ம் திருநாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் உள்ள சுவாமி ஜெயநாதருக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வைர வேல் வைத்தவாறு, வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதிந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வைரவேல் சுவாமிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தப்பட்டது. பின்னர் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா 4-ம் நாளான இன்று மீண்டும் சுவாமி ஜெயந்திநாதருக்கு சாத்தப்பட்டுள்ளது.
English Summary
kanda sasti festival 4th day function