ரத்தம் சிந்திய பூமி... இங்கு தாமரை மலர்ந்தே தீர வேண்டும் - எல்.முருகன் பேச்சு.!
L murugan campaign
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரும் மத்திய மந்திரியுமான எல். முருகன் மேட்டுப்பாளையம் சித்தி விநாயகர் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதனை தொடர்ந்து அதே பகுதியில் தாமரை சின்னத்திற்கு மக்களிடையே வாக்குகளை சேகரித்துக் கொண்டிருந்தபோது அவர் பேசியிருப்பதாவது,
பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வீடு காட்டும் திட்டம், கியாஸ் இணைப்பு திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலப் பணிகளை ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வந்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் தி.மு.க அரசு முறையாக செயல்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குடிநீர் பஞ்சம். இது திமுகவின் சாபக்கேடு.
மேட்டுப்பாளையம் மக்கள் தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஒன்றாக பார்ப்பவர்கள். இது சாதாரண ஊர் அல்ல தியாக பூமி. ரத்தம் சிந்திய பூமி. மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
தி.மு.க ஆட்சியில் பெண்களை மிகவும் தரகுறைவாக தான் பேசுவார்கள். நடத்துவார்கள். இதனால் மேட்டுப்பாளையத்தில் தாமரை மலர்ந்தே தீர வேண்டும் என தெரிவித்துள்ளார்.