உருளையன்பேட்டை தொகுதியில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி.. நேரு MLA திடீர் ஆய்வு!
Laying of new water pipelines in Urulayanpettai Block Nehru MLA's surprise inspection
புதுச்சேரி மாநிலம் ,உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட உருளையன்பேட்டை வார்டு பகுதியான நெல்லித்தோப்பு, கண்ணார வீதியில் குடிநீர் குழாய்கள் புதிதாக பதிக்கப்பட்டுவரும் பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி மாநிலம் ,உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட உருளையன்பேட்டை வார்டு பகுதியான நெல்லித்தோப்பு, கண்ணார வீதியில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மேலும் குழாய்களில் துரு பிடித்தும் அங்கங்கே உடைந்தும் குடிநீர் சரியாக வருவதில்லை என அப்பகுதி மக்கள் மக்களிடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து கோரிக்கைவைத்துவந்தனர்.
இந்தநிலையில் கோரிக்கையை தொடர்ந்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக மேற்கண்ட பகுதியில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி பொதுப்பணித்துறை பொது சுகாதார குடிநீர் வழங்கல் பிரிவு மூலம் ரூபாய் 4 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்... 30.01.2025... இன்று... மேற்கண்ட பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை பொது சுகாதார குடிநீர் வழங்கல் பிரிவு இளநிலை பொறியாளர் வெங்கடேசன் மற்றும் கணேசன் மேலும் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.
English Summary
Laying of new water pipelines in Urulayanpettai Block Nehru MLA's surprise inspection