காதல் தகராறில் கொலை செய்யப்பட்ட சிறுவன்.. 7 பேருக்கு ஆயுள் தண்டனை..! - Seithipunal
Seithipunal


காதல் விவகாரத்தில் சிறுவனை கொலை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்பளித்ததுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி.  இவரது மகள் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராற்றில் கோபி (17) என்ற சிறுவனை கலியமூர்த்தியின் உறவினர்கள் 2014 ம் ஆண்டு கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் அதே ஊரை சேர்ந்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 8 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி வழக்கு முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பில் லட்சுமணன் (32), நாகராஜ் (33), தீனா என்ற வெங்கடேஷ் (33), மணி, சரண் (32), பாபு (32), அய்யப்பன் (36)  ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததுள்ளது. மேலும், அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்  விதிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Life imprisonment for 7 persons


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->