மகளிர் விடுதியில் போலீசார் பாலியல் தொல்லை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மகளிர் விடுதி ஒன்றுக்கு மது போதையில் விருகம்பாக்கம் காவல் நிலைய போலீசாரான ராஜா மற்றும் குமரேசன் இருவரும் சென்று அங்கிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் துரை ரீதியான விசாரணைக்கு பின் அவர்கள் இருவரும் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மாநகர காவல் ஆணையர் இருவரையும் பணி நீக்கம் செய்தார். 

இந்த உத்தரவை எதிர்த்து குமரேசன் மற்றும் ராஜா இருவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம், "விசாரணை விதிகளும், இயற்கை நீதியும் முறையாக பின்பற்றப்பட்ட பின்னர் தான் பணி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எனவே, காவல் ஆணையர் உத்தரவு சரிதான் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று எந்த நிலையிலும் கருத முடியாது." என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras high court judgment about police harassment in hostel


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->