தஞ்சாவூர் || உதயநிதி வருகைக்காக பிரமாண்ட ஏற்பாடு - பரிதாபமாக பறிபோன தொழிலாளியின் உயிர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 7ஆம் தேதி தஞ்சாவூர் வருகிறார். துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தஞ்சைக்கு முதல் முறையாக வருவதால் திமுக நிர்வாகிகள் உதயநிதியை வரவேற்கபதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

இதற்கான பணிகள் பந்தல் கோவிந்தராஜன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் படி ஊழியர்கள் சாலைகளில் திமுக கொடியை கட்டுவதற்காக இரும்பு கம்புகளை ஊன்றி வந்தனர். இந்த நிலையில், ஊழியர் நாகராஜன் என்பவர் இரும்பு கம்பை தூக்கிய போது மேலே சென்ற மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள் நாகராஜனை 108 ஆம்புலன்ஸ் மூலம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

labor died in thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->